தீரன் சின்னமலையின் 215-வது நினைவு நாள்.. சிலைக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
தீரன் சின்னமலையின் 215-வது நினைவு நளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை, ஆகஸ்ட்-2

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 215-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. தீரன் சின்னமலை சிலைக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும். அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

