தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 5,879 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-1

தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,879 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,822 பேர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிளங்களிலிருந்து வந்தவர்களில் மொத்தம் பாதித்தோர் 57 பேர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,90,966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 7,010 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 56,738 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 99 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,034 ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,00,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 86,301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12,436 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 27 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,140 ஆக உள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 121 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் இதுவரை 26,18,512 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 1,52,651 பேரும், பெண்கள் 99,060 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 27 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
  • தமிழகத்தில் 12 வயதிற்குள் 12,536 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 2,07,773 பேரும், 60 வயதிற்கு மேல் 31,429 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *