தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை..! சவரனுக்கு ரூ. 41,424 -க்கு விற்பனை..!!..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41,424க்கு விற்பனையாகிறது.

சென்னை, ஆகஸ்ட்-1

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை 28 ரூபாய் அதிகரித்து 5,178 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து 41,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் மளமளவென உயர்ந்து வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 40 காசுகள் அதிகரித்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *