தேசியக் கொடியை மதிப்போம்..திராவிடக் கொடியும் பிடிப்போம்.. புதிய கல்விக்கொள்கை குறித்து வைரமுத்து ட்விட்..!!

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என ட்விட் செய்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-1

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசும் முதல்வரும், அமைச்சரவையும் இன்னும் சில நாட்களில் இதுபற்றி முடிவு எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், “அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்;
திராவிடக் கொடியும் பிடிப்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *