அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க திட்டம்…அதிபர் டிரம்ப் அதிரடி..!

அமெரிக்காவில் சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ள நிலையில், சீனாவின் செயலியானா டிக்டாக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் கூறி உள்ளார்.

நியூயார்க், ஆகஸ்ட்-1

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க செனட்டர்கள் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் உயரதிகாரிகள் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. இதற்கு மாற்று திட்டம் வைத்துள்ளோம். டிக்டாக் செயலிக்கு பதில் வேறு செயலி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றி யோசித்து வருகிறோம் என டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *