உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.77 கோடியாக அதிகரிப்பு..!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.82 லட்சத்தை தாண்டியது.
ஆகஸ்ட்-1

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 682,197 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 17,745,626 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11,151,820 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,502 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.