இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கியது..!!

இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 764 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி, ஆகஸ்ட்-1

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 16,95,988 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 57,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 764 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 10,94,374 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,65,103 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை 14,994 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,56,158 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1,50,966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 3,963 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,20,930 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 10,705பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,935 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,83,956 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 57,968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *