நாடு முழுவதும் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்..!

நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை, ஆகஸ்ட்-1

இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாக வாழ்க்கையை நினைவு கூறும் வகையில் உலகம் முழுக்க பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இறைத்தூதர் இப்ராஹிம் இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.

இதன்படி, நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலையிலேயே டெல்லியில் புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் பெருமளவுக்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். மசூதிக்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவிப்பது இஸ்லாமியர்கள் வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கட்டி தழுவாமல் சமூக இடைவெளியை கடைபிடித்து வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை 7-ம் கட்டமாக ஊடங்கு நீட்டித்தபோதும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, இஸ்லாமியர்கள், தங்களது வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *