இந்தியாவில் ஊரடங்கை மதிக்காமல் அலட்சியமாக சுற்றி வருவதே கொரோனா பரவ காரணமாம்..!

இந்தியாவில் அலட்சியத்தால் தான் 60 சதவீத கொரோனா தொற்று பரவுகிறது என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி, ஜூலை-31

இந்த ஆய்வானது பொதுமக்கள் பயன்படுத்தும் ஆப் மூலமாக கருத்துக்கள் கேட்டு எடுக்கப்பட்டுள்ளது.பொறுப்பில்லாத, பயமில்லாத மக்களால்தான் கொரோனா வைரஸ் 60 சதவீதம் பரவுகிறது என ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது.

இந்த ஆய்வில் இந்தியா முழுவதிலும் 300 மாவட்டங்களிலிருந்தும் 8 லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளனர்.இதில் 70 சதவீதம் பேர் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறோம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

18.8 சதவீத மக்கள் மட்டுமே அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதுவும் மக்கள் இந்த கொரோனாவை தீவிரமாக நினைக்காமல் ஊரடங்கை சற்றும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக சுற்றி வருவதே காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 60 சதவீதம் பேர் , “பொறுப்பில்லாதவர்களால் தான் கொரோனா வைரஸ் பரவுவதாக” தெரிவித்துள்ளனர்.

இந்த கொரோனா பரவலைத் தடுக்க அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் 9.34 சதவீத மக்கள் அரசின் மருத்துவ சிகிச்சைகளில் திருப்தியில்லை. முறையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என்று கூறியுள்ளனர். 12.45 சதவீத மக்கள் முறையான பரிசோதனைகள் கையாளப்படுவதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *