கோவையில் கோவிட் 19 சிறப்பு வார்டுகளை அமைச்சர் S.P.வேலுமணி பார்வையிட்டார்..
கோவை மத்தம்பாளையத்திலுள்ள கே.டி.வி.ஆர் கல்லூரியில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள 106 படுக்கைகள் கொண்ட கோவிட் 19 சிறப்பு வார்டுகளை இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.
கோவை, ஜூலை-31

கோவையில் இன்று ஒரேநாளில் 169 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 300-ஐ கடந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் மூலமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,821 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் கொரோனா தடுப்பு பணிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கோவை மத்தம்பாளையத்திலுள்ள கே.டி.வி.ஆர் கல்லூரியில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள 106 படுக்கைகள் கொண்ட கோவிட் 19 சிறப்பு வார்டுகளை இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.

இதனிடையே, கோவை ஆர்.எஸ் புரம் லாலி ரோடு பகுதியில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் ரூ. 1.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள அதிநவீன பாலக கட்டிடத்திற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்.