ஆந்திராவில் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை.. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு

ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஐதராபாத், ஜூலை-31

ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 10,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,30,557 -ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 68 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1281-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 60,024 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 69,252 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிளாஸ்மா தானம் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த ஒருவர் உடலில் வைரஸை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்திகள் இருக்கும். எனவே, அவர்களின் பிளாஸ்மாவை பிறருக்கு செலுத்துவதன் மூலம் அவரும் விரைவில் வைரஸில் இருந்து குணமடைகிறார். இந்தமுறை பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.இந்தியாவிலும் இதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாநிலத்தில் நிலவி வரும் தற்போதையை நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ. 5,000 ஊக்கத்தொகை வழங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ. 5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *