இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக புகார்.. இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, ஜூலை-31

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசிய கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும், இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் , கந்த்சஷ்டி கவசத்தையும் இழிவாக பேசியதாக திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் மீது காவல் ஆணையர் அலுவகத்தில் பாஜக, இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், இந்து மதத்தை அழிக்கும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை எனவும், இந்து புராணங்கள் குறித்தும், இந்து கடவுள்கள் குறித்தும் இழிவாகப் பேசிய வேலு பிரபாகரனை கைது செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் வேலு பிரபாகரன் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சமூகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தியது என்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இன்று காலை வேலு பிரபாகரனை அவரது இல்லதில் வைத்து கைது செய்தனர்.

வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *