பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம், மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 2, 3, 4, 5, 7, 8-ம் மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, ஜூலை-30

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது.
முகக்கவசம் அணிதல், முறையான தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 1 மணி நேரத்தில் 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சிகளில் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், அன்றில் இருந்தே புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
இதனிடையே, தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.