வேட்டி, சட்டையில் அசத்திய பிரதமர் மோடி…

சென்னை, அக்டோபர்-11

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு சென்னை உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள், பிரச்சினைகள், எல்லைப்புற சிக்கல்கள், வர்த்தகம், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து அதிகம் பேசக்கூடும் என தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கைக்குலுக்கி பிரதமர் மோடி வரவேற்றார். அப்போது, வழக்கமாக, குர்தாவில் வரும் பிரதமர் மோடி தற்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து வந்திருந்தார். ஏற்கனவே, காலையில் சென்னை வந்தவுடன் பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்திருந்தார். தற்போது, வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *