தமிழகத்தில் மேலும் 5,864 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் அதிகபட்சமாக 97 பேர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 97 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூலை-30

தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக 6 ஆயிரத்தை கடந்து பாதிப்பு பதிவான நிலையில் இன்று குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது.

இதில், அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 98,767 ஆனது.

இன்றைய பாதிப்பில் தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 5,811 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 53 பேர்.

தமிழகத்தில் மேலும் 97 பேர்(அரசு மருத்துவமனை -65, தனியார் மருத்துவமனை -32) கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 3,838 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மட்டும் 5,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,78,178 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 57,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 61,202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 25,97,862 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *