தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்..!
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை, ஜூலை-30

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதில், ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி இ பாஸ் பெற வேண்டும் என்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இரவு 7 மணி வரை இயங்கலாம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் 10000 ரூபாய்க்குள் வருமானம் உள்ள கோவில்களை திறக்கலாம், ஆகஸ்ட் மாதத்திலும் பேருந்து மற்றும் ரெயில்கள் ஓடாது, அத்தியவசிய மற்றும் அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம்’ என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.