இந்தியாவிலேயே சென்னையில்தான் அதிக கொரோனா பரிசோதனைகள்.. அமைச்சர் S.P.வேலுமணி

சென்னை, ஜூலை-30

தமிழக நகர்ப்புற மற்றும்‌ ஊரக உள்ளாட்சி அமைப்புகளின்‌ சார்பில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று தொடர்பாக தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ தொடர்பான ஆலோசனைக்‌ கூட்டம்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்பு திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.யவவேலுமணி தலைமையில்‌ நேற்று தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌, அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி பேசியதாவது :-

பெருநகர சென்னை மாநகராட்‌ சிக்குட்‌பட்ட பகுதிகளில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி கொரோனா வைரஸ்‌ தொற்று தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரத்தில்‌ ஒவ்வொரு நாளும்‌ சராசரியாக 12,000 பரிசோதனைகள்‌ மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை மாநகரத்தில்‌ 10 லட்சம்‌ மக்களுக்கு 21000 பரிசோதனையும்‌, தமிழ்நாட்டில்‌ 7,000 பரிசோதனையும்‌, இந்தியா அளவில்‌ 400 பரிசோதனையும்‌ செய்யப்படுகின்றன.

30 கொரோனா வைரஸ்‌ தொற்று பரிசோதனை மாதிரிகள்‌ சேகரிக்கும்‌ மையங்கள்‌, 10 நடமாடும்‌ பரிசோதனை மாதிரிகள்‌ சேகரிக்கும்‌ மையங்கள்‌ எற்படுத்தப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளில்‌ இதுவரை 6.75 இலட்சம்‌ எண்ணிக்கையில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநகராட்‌சியிலும்‌ இந்த அளவு எண்ணிக்கையில்‌ பரிசோதனைகள்‌ மேற்கொள்ளப்படவில்லை.

பெருநகர சென்னை மாநகராட்சியில்‌ 17 லட்சம்‌ முகக்கவசங்கள்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டு, தற்போது 10,710 லட்சம்‌ முகக்கவசங்கள்‌ வழங்கப்பட்டுள்ளது. 617 இலட்சம்‌ கையுறைகள்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டு, 3.84 இலட்சம்‌ கையுறைகள்‌ வழங்கப்பட்டுள்ளன. கோவிட்‌ தொற்று உடைய மற்ற வியாதிகள்‌ இல்லாத 60 வயதுக்குட்பட் டோர்‌ கோவிட்‌ சோதனை மையங்களில்‌ பரிசோதிக்கப்பட்ட பின்னர்‌ அவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும்‌ இவர்களின்‌ இருப்பிடத்தை களப்‌ பணியாளர்கள்‌ பார்வையிட்டு வருகின்றனர்‌. இதனுடன்‌, வீட்டிலேயே சிகிச்சை பெறுபவர்களுக்கு தொலைபேசி மூலம்‌ ஆலோசனையும்‌ வழங்கப்படுகிறது.

மருத்துவமனையில்‌ அனுமதி தேவைப்படுவர்களுக்கு சுகாதார ஆய்வாளர்கள்‌ மூலம்‌ எற்பாடு செய்யப்படுகிறது. இந்த தொடர்‌ கண்காணிப்பு வீட்டு தனிமையில்‌ உள்ள 14 நாட்களுக்கு நடைபெறும்‌. இதுவரை 1958 பேர்களுக்கு இத்திட்டத்தின்‌ மூலம்‌ ஆலோசனை வழங்கப்பட்‌ டுள்ளது என தெரிவித்தார்‌. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ 38 வீடற்றோருக்கான காப்பகங்கள்‌, அரசு மருத்துவமனைகளில்‌ உள்ள 13 சிறப்பு காப்பகங்கள்‌ மற்றும்‌ 41நிவாரண மையங்களில்‌ மொத்தம்‌ 5,261 பேர்கள்‌ தங்க வைக்கப்பட்டு, நோய்‌ தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசங்கள்‌ மற்றும்‌ கை சுத்திகரிப்பான்கள்‌ வழங்கப்பட்டுள்ளன.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்‌ மூலம்‌ மாநகராட்சியில்‌ பெறப்படும்‌ காய்கறிகள்‌, அரிசி மற்றும்‌ மளிகை பொருள்கள்‌ காப்பகங்களில்‌ தங்கி உள்ளவர்களுக்கு உணவு வழங்க எதுவாக அளிக்கப்பட்டு வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில்‌ மொத்தம்‌ 10.42 இலட்சம்‌ கட்டடங்கள்‌ உள்ளன. இவற்றில்‌, 19.80 இலட்சம்‌ குடும்பங்கள்‌ உள்ளன. வீடுவீடாக சென்று காய்ச்சல்‌ கணக்கெடுப்பு செய்யும்‌ 12,000 களப்பணியாளர்களுக்கும்‌ நாளொன்றுக்கு 100 முதல்‌ 150 வீடுகள்‌ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு காய்ச்சல்‌ கணக்கெடுப்பு பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்களப்பணியாளர்களை கண்காணிக்க 15 மேற்பார்வையாளர்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌. இக்களப்‌ பணியாளர்கள்‌ தினந்தோறும்‌ இடைவிடாது தொடர்‌ ஆய்வு செய்து, தினமும்‌ அதற்குண்டான
பதிவுகளை உரிய முறையில்‌ மேற்கொள்கின்றனர்‌.

ஒவ்வொரு நாளும்‌ 10.88 இலட்சம்‌ வீடுகள்‌ ஒப்பணியாளர்களால்‌ பார்வையிடப்படுகிறது. இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில்‌, சென்னை மாநகரில்‌ 1,51,142 நபர்களுக்கு காய்ச்சல்‌, இருமல்‌, மூச்சுத்திணறல்‌ போன்ற அறிகூறிகள்‌ கண்டறியப்பட்டு, 1,45,889 நபர்கள்‌ குணமடைந்துள்ளனர்‌. மீதமுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்‌ கண்காணிப்பில்‌ உள்ளனர்.

நாளொன்றிற்கு இரண்டு முறை கிருமி நாசினி அனைத்து பகுதிகள்‌ மற்றும்‌ வீடுகளிலும்‌ தெளிக்கப்பட்டு வருகின்றன. இந்தப்‌ பகுதிகளில்‌ நுழையும்‌ இடங்களில்‌ அனைவருக்கும்‌ கைகழுவும்‌ வசதிகள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும்‌, அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள்‌ முழுமையாக வழங்கவும்‌, கிருமி நாசினிகள்‌ இரண்டு மாத இருப்பை உறுதி செய்யவும்‌, போதுமான அளவில்‌ கிருமி நாசினி தெளிப்பு உபகரணங்கள்‌ இருப்பில்‌ வைக்கவும்‌, பொதுமக்களுக்கு காவல்‌ துறையும்‌, உள்ளாட்சிகளும்‌ தொடர்ந்து விழிப்பணர்வு ஏற்படுத்தவும்‌, பொதுமக்கள்‌ சமூக இடைவெளியை அனைத்து பொது இடங்களிலும்‌ கடைபிடிப்பதை 100% உறுதி
செய்யவும்‌, அனைத்து அம்மா உணவகங்களிலும்‌ மூன்று வேளையும்‌ சூடான, சுகாதாரமான, தரமான உணவு வழங்க வேண்டும்‌ எனவும்‌, தினசரி காய்கறி சந்தைகளின்‌ செயல்பாடு மற்றும்‌ தள்ளுவண்டிகள்‌/ இலகுரக வாகனங்கள்‌ மூலமாக தெருக்களில்‌ சென்று காய்கறிகளை நியாய விலையில்‌ விற்பதை கண்காணிக்க வேண்டும்.

அனைத்து பொது இடங்களிலும்‌ தினசரி தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளவும்‌, வைரஸ்‌ தொற்று உள்ளவர்களின்‌ வீடுகளில்‌ குப்பை தனியே சேகரித்தல்‌ மற்றும்‌ விஞ்ஞான முறைப்படி இறுதியாக்கம்‌, அனைத்து தூய்மைப்‌ பணியாளர்களுக்கும்‌ கையுறை, முகக்கவசம்‌ போன்ற பாதுகாப்பு உபகரணங்கள்‌ அணிந்து செயல்படுவதை உறுதி செய்யவும்‌, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவ போதிய சோப்புகள்‌ வழங்கிடவும்‌, உள்ளாட்சி பகுதிகளில்‌ வரும்‌ புகார்கள்‌ மீது உடனுக்குடன்‌ நடவடிக்கைகள்‌ எடுத்திடவும்‌. அனைத்து நிவாரண உதவிகளும்‌ பயனாளிகளுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்திடவும்‌ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி‌ உத்தரவிட்டார்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *