சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்ப்டடோர் எண்ணிக்கை 97,575 ஆக அதிகரிப்பு..!

சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை, ஜூலை-30

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 97,575 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2076 பேர் உயிரிழந்த நிலையில், 82,764 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 20 பலியாகியுள்ளனர். 1234 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 12,735 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 74 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.01 சதவீதம், பெண்கள் 40.99 சதவீதம்.

இந்நிலையில் சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *