இந்தியாவில் 16 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 15,83,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி, ஜூலை-30

கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 15,83,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 775 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,20,582 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,28,242 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை 14,463 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,39,755 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1,46,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 3,907 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,18,633 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 10,770 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,741 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,72,883 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 57,490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *