ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூலை-30

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து குடும் அடைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித் தொகையுடன், விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொடர்ந்து மே, ஜூன் மற்றும் ஜூலை மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின்படி கூடுதல் அரிசியுடன் நியாயவிலைக் கடைகளில் விலை இன்றி வழங்கப்பட்டது. ஒரு கிலோ சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்பட்டு வந்த இலவச ரேஷன் பொருட்கள் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாய விலை கடைகளில் இனி இலவசப் பொருள்கள் கிடையாது. ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களை பணம் கொடுத்துத் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும். ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு இந்த தேதிகளில் வீடு தேடி சென்று ஊழியர்கள் டோக்கன் தர வேண்டும். நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும்.ஆகஸ்ட் 5ந்தேதி முதல் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை முறையாக விநியோகம் செய்ய வேண்டும்.ரேசன் கடைகளுக்கு 7ந்தேதிக்கு பதில் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *