சமயம் சார்ந்த நம்பிக்கைகளை இழிவுபடுத்துவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை.. அமைச்சர் S.P.வேலுமணி

மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் மீது வன்மத்தோடு களங்கம் சுமத்தி இழிவுப்படுத்துவோர் யாராயினும் தமிழக அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-29

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய இந்து தமிழர் பேரவை கோபால் ஆகியோர் காவல்துறையினரால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் மீது வன்மத்தோடு களங்கம் சுமத்தி இழிவுபடுத்துவோர் யாராயினும், தமிழக அரசு எவ்வித பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *