5 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன..!

பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்களில் முதல்கட்டமாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு போர் விமானம் ரஃபேல் போர் விமானங்கள் ஆகும்.

சண்டிகர், ஜூலை-29

கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி முதலாவது ரஃபேல் விமானத்தை பிரான்ஸ் அரசிடம் இருந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவை நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டன. பிரான்சில் இருந்து புறப்பட்ட ரபேல் விமானங்கள் 7 மணி நேரம் பயணித்து நேற்று முன்தினம் இரவு ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள விமான தளத்தில் தரையிறக்கப்பட்டன. பிரான்சில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வரும் பயண தூரம் அதிகம் என்பதால் நடு வானிலேயே இந்த விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்த விமானங்களுடன் சேர்ந்து பயணிக்கும் பிரான்ஸ் போர் விமானங்கள் மூலமாக இந்த எரிபொருள் நிரப்பும் பணி நடுவானிலேயே செய்யப்பட்டது.

இந்திய வான் எல்லைக்குள் வந்த ரஃபேல் போர் விமானத்தை இந்திய விமானப் படையின் 2 சுகோய் போர் விமானங்கள் வரவேற்று அழைத்து வந்தன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் பிற்பகல் 3.30 மணியளவில் அம்பாலாவில் தரையிரங்கின.இந்திய விமானப்படை தளபதி பாதுரியா 5 ரஃபேல் போர் விமானங்களையும் அம்பாலா விமானப் படை தளத்தில் வரவேற்றார்.

ரஃபேல் போர் விமானங்களின் வருகையையொட்டி அம்பாலா பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *