தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிப்பு..!

பிளஸ் 1 தேர்வு முடிவுகள், பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை-29

இதுகுறித்து தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;-

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேரவெழுதிய மற்றும் 27.07.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள், 31.07.2020 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன், http://www.tnresults.nic.in/ , http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/ ஆகிய இணையதளங்கள் வழியாக அறிந்துகொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழிகளில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல்(Statement of Marks) வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *