தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை, ஜூலை-29

தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என தமிழக அரசு 2010-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஏற்கனவே, இது தொடர்பான வழக்கு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், தற்போது இதனை அமல்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டார். ஆனால், கேரள நீதிமன்ற உத்தரவுப்படி இதனை அமல்படுத்தலாம் என மற்றொரு நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதிகளுக்கு இடையே முரணான தீர்ப்பு உள்ளதால், வழக்கை 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்க அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

முதன்முறையாக 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கினை விசாரித்த வரலாறு முதன்முறையாக நிகழ்ந்தது. இதன்படி இந்த வழக்கு 3 பெண் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், அனிதா சமந்த், பி.டி உஷா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடியாக தீர்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *