ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! சவரன் ரூ. 216 அதிகரித்து ரூ. 40,512க்கு விற்பனை..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.27 உயர்ந்து, ரூ.5,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.216 உயர்ந்து, ரூ.40,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, ஜூலை-29

ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றப்படி மக்கள் வீட்டை விட்டே இன்னும் வெளியில் வரவில்லை. சகஜநிலை திரும்பாத நேரத்திலும் தங்கத்தின் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. கொரோனாவின் தாக்கம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு போன்றவற்றால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யூதங்கம் விலை மட்டும் கொரோனாவின் வேகத்தை விட அதிகமாக உயர்ந்து வந்தது.

இந்த நிலையில் இன்று 9வது நாளாக தங்கம் விலை உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.27 அதிகரித்து கிராம் ரூ.5,064க்கும், சவரனுக்கு ரூ.216 உயர்ந்து சவரன் ரூ.40,512க்கும் விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக 9 நாட்களில் சவரன் ரூ.3000 அளவுக்கு உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராம் 71.30 ரூபாய்க்கும் கிலோ, 71,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *