இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 15,31,669-ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.31 லட்சத்தை கடந்துள்ளது.
டெல்லி, ஜூலை-29

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,31,669 ஆக உயர்ந்துள்ளது. 9,88,030 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 5,09,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34,193 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மற்றும் 768 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4,08,855 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 1,77,43,740 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை 13,883 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,21,944 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1,47,896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 3,853 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,16,372 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 10,994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,571 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,62,249 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 54, 896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.