உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.68 கோடியை தாண்டியது..!!

உலகம் முழுவதும் கொரோனாவால் 1,68,83,789 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,04,50,932 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.62 லட்சத்தை தாண்டியது.

ஜூலை-29

உலக அளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தடுப்பு மருந்துகள் வெளிவராத நிலையில், கொரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,62,480 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,68,83,789 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,04,50,932 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,504 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,703,873 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,52,319 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,498,343 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 88,634 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,484,649 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,32,135 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 34,224 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 9,88,770 பேர் குணமடைந்தனர்.

ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,504 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,23,515 ஆக அதிகரித்துள்ளது.

பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,612 ஆக அதிகரித்துள்ளது. பெரு நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,95,005 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,436 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 327,690 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *