எத்தியோப்பியா நாட்டு பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!!!

ஸ்டாக்ஹோம், அக்டோபர்-11

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் புதிய சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.  எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக கடந்த 2-4-2018 அன்று பொறுப்பேற்ற அபி அஹமது அலி அண்டைநாடான எரித்திரியா நாட்டுடனான எல்லைப் பிரச்சனையை சுமூகமாக மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிப்பு. இந்த பரிசு 9 லட்சத்து 14 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 40 லட்சம்) ரொக்கம், ஒரு தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *