தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை-29

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 25-ந்தேதிக்குப்பின் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே, ஜூலை 31-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்திற்கு தளர்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில், சென்னை தவிர பிற பகுதிகளில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது போல் பிரித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *