ஜெயலலிதாவின் இல்லத்தில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி, 38 ஏசி.! வேதா இல்லம் அரசுடைமையானது அரசிதழில் வெளியீடு..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமையானது என தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. மேலும், ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விவரங்கள் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

சென்னை, ஜூலை-29

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து, அதற்கான சட்ட ரீதியான பணிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு, வேதா இல்லத்தை கையகப்படுத்துவதற்கான இழப்பீடு தொகையாக ரூ 67.90 கோடியை சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளது. எனவே ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இந்த இல்லத்திற்கு உரியவர்கள், தேவைப்பட்டால் இழப்பீடு தொகையை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தீபா தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது பற்றி இன்று தமிழக அரசின் அரசிதழில் வெளியாகி உள்ளது. மேலும், ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விவரங்களும் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் ;-

  • 4 கிலோ 372 கிராம் தங்கம்; 601 கிலோ 424 கிராம் வெள்ளி
  • 162 வெள்ளி பொருட்கள்; 6514 சமையல் பெருட்கள்
  • 8,376 புத்தகங்கள்; 394 நினைவு பரிசுகள்
  • 11 டிவி; 10 பிரிட்ஜ்; 38 ஏசி; 556 பர்னிச்சர்
  • 15 பூஜை பொருட்கள்; 1055 காட்சி பெட்டி பொருட்கள்
  • துணி, தலையானி, பெட்சீட்,டவல் காலணி என 10,438
  • 29 தொலைபேசி/ கைபேசி
  • 221 சமையல் மின்சார பொருட்கள்; 251 மின்சார பொருட்கள்
  • 6 கடிகாரம் என மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *