கர்நாடகாவில் 7-ம் வகுப்பு புத்தகத்தில் திப்பு சுல்தான் பாடம் நீக்கப்பட்டதால் சர்ச்சை..!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடத்திட்டத்தை குறைக்க திட்டமிட்டுள்ள கர்நாடகா, சமூக அறிவியல் புத்தகத்தில் திப்பு சுல்தான் பாடத்தை நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, ஜூலை-28

கொரோனா வைரஸ் தொற்றால் சிபிஎஸ்சி 2020-2021-ம் ஆண்டிற்கு மட்டும் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் மாநிலங்களும் பாடத்திட்டத்தை குறைக்க முடிவு செய்துள்ளன. கர்நாடக அரசும் அதற்கான பணிகளில் களம் இறங்கியுள்ளது. 7-ம் வகுப்பான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஏற்கனவே திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு குறித்த பாடம் இடம் பெற்றிருந்தது. தற்போது அதை கர்நாடக அரசு நீக்கியுள்ளது. அதேவேளையில் 6-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பில் திப்பு சுல்தான் குறித்த பாடம் இருக்கும் எனத்தெரிவித்துள்ளது.
குறைக்கபட்ட பாடத்திட்டத்தை கர்நாடக பாடத்திட்டம் சங்கம் (KTBS) இணைய தளத்தில் அப்லோடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திப்பு சுல்தான் பாடப்பகுதி நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஐந்தாவது சேப்டரில் திப்பு சுல்தான், அவரது தந்தை, வரலாற்று சிறப்புமிக்க மைசூர், அவரது நிர்வாகம் குறித்து இடம்பிடித்திருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.