சென்னையில் கொரோனா சந்தேக வார்டு பிரிவு தொடக்கம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னையில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சந்தேக வார்டு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-28

சென்னையில் கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

சென்னையில் தொடக்கத்தில் நாளொன்றுக்கு 4,000 வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், நோய்த் தொற்றுள்ளவா்களை விரைவாகக் கண்டறியும் வகையில் பரிசோதனையும் அதிகப்படுத்தப்பட்டது. சென்னையில் நாள்தோறும் 12,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 23,000 காய்ச்சல் முகாம்கள் மூலம் இதுவரை 14 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சந்தேக வார்டு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு முன் கொரோனா அறிகுறி இருந்தால் கொரோனா சந்தேக வார்டில் அவர்கள் தனிமைப்படுத்திய பின், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இ-பாஸ் பெற விரும்புவோர் அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பித்தால் நிச்சயம் இ-பாஸ் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *