நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை-28

இது குறித்து தி.மு.க. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 30ந்தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரபரப்புக்கு மத்தியில் நடைபெறும் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அரசியல் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் கட்சிப் பணிகள் பற்றி இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து ஆலோசிப்பார் எனக் கூறப்படுகிறது.