ரூ.2,368 கோடி மதிப்பிலான 8 புதிய நிறுவனங்களின் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!!

சென்னை , ஜூலை-28

சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், 2,368 கோடி ரூபாய் முதலீட்டில் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 8 தொழில் திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரம்:

1) பல்லாவரத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், CapitaLand நிறுவனத்தால் கட்டப்படும் International Tech Park Chennai, Radial Road தகவல் தொழில் நுட்ப பூங்கா திட்டம்.

2) கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 350 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், TATA Chemicals நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டம்.

3) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Nissei Electric நிறுவனத்தின் மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.

4) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த Usui Susira நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.

5) செங்கல்பட்டு மாவட்டம், Mahindra World City தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Dinex ãWtd¤Â‹ Diesel Engine-களுக்கான Exhaust உற்பத்தி திட்டம்.

6) காஞ்சிபுரம் மாவட்டத்தில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Steel Shoppe நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.

7) கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 47 கோடி ரூபாய் முதலீட்டில், 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், MRC Mills நிறுவனத்தின் Textiles processing திட்டம்.

8) விழுப்புரம் மாவட்டம், கம்பூர் கிராமத்தில், 16 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Sri Raajarajeshwari Life Care நிறுவனத்தின் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம். இந்த நிறுவனம் ஊடீஏஐனு-19 நிவாரண மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடவுள்ளது.

என மொத்தம் 8 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 2,368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வானூர்தி தொழிற்பூங்காவில், டிட்கோ மற்றும் டைடல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால், 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள வானூர்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்புக்கான AERO HUB உயர்நுட்ப தொழில் மையத்திற்கும்முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 3,185 கோடி ரூபாய் முதலீட்டில், 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார்கள். இந்த 11 திட்டங்களில், 8 திட்டங்கள் நேரடியாகவும், 3 திட்டங்கள் காணொலிக் காட்சி மூலமாகவும் துவக்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *