இந்தியாவில் 15 லட்சம் பேரை நெருங்கிய கொரோனா பாதிப்பு..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 654 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி, ஜூலை-28

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 14,83,157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 47,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 654 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 9,52,744 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 35175 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,96,988 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டப்போகிறது. இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்த இடத்திலும் மகாராஷ்டிரா உள்ளது.
தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் 17வது இடத்தில் உள்ளது.