கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது..!

கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட விவகாரத்தில், கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது செந்தில்வாசனும் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளார்.

சென்னை, ஜூலை-28

கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பி கறுப்பர் கூட்டம் என்ற ‘யூடியூப்’ சேனலில் வீடியோ வெளியிட்டதாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன், ராமாபுரத்தைச் சேர்ந்த சுரேந்திரன் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் ‘சைபர் கிரைம்’ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் செந்தில்வாசனிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதம் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த மவுண்ட் கோபால் என்பவரையும், ‘சைபர் கிரைம்’ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், மவுன்ட் கோபால் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்டார். அதன் பேரில் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமீனில் வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *