சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்கள் 2 பேருக்கும், சிபிஐ அதிகாரிகள் 6 பேருக்கும் கொரோனா..!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைதான காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை, ஜூலை-28

சாத்தான்குளம் தந்தை, மகனான ஜெயராஜ்-ஃபென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது போலீஸாரால் மிக கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட 10 பேரில் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து வந்த 8 சிபிஐ அதிகாரிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் சிபிஐ அதிகாரிகளுக்கு உதவி செய்த மதுரை சிபிஐ அதிகாரிக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் கொரோனா பரவியுள்ளதால், இது பிற கைதிகளையும் பாதித்திருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த தகவலையடுத்து மதுரை சிறையில் தேவையான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளச் சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2 தினங்களுக்கு முன்பு எஸ்.எஸ்.ஐ. பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதும் இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் 8 பேரில் 6 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.சிபிஐ அதிகாரிகள் 6 பேரும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *