புதுச்சேரியில் கொரோனாவுக்கு என் ஆர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் பலி..!!

கொரோனா பாதிப்பு காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.பாலன் (67) இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

புதுச்சேரி, ஜூலை-28

புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதுவரை 2872 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 1720 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1109 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 44 பேர் கொரோனவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வான பாலன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் 23-ம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பாலன் உயிரிழந்தார். அவருக்கு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு பலியான முதல் அரசியல் பிரமுகர் பாலன் ஆவார்.

புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதியில் இருந்து இவர் எம்.எல்.ஏ.வாக ஒரு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை இதே தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இவரது மறைவுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *