தங்கம் விலை புதிய உச்சம்.. சவரன் ரூ.40,104க்கு விற்பனை..!!

தங்கம் விலை இன்று சவரன் 40 ஆயிரத்தை தாண்டிவிட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் விலை உயர அதிக வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, ஜூலை-27

சென்னை, ஜூலை-27

கொரோனா காலத்திலும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தமாற்றமும் ஏற்படவில்லை.இன்று காலை தங்க மார்க்கெட் தொடங்கியதும் கிராமுக்கு ரூ.74 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4978க்கும் சவரனுக்கு ரூ.592 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39824 க்கும் விற்கப்பட்டது. இதனால் நகை வாங்குபவர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இன்றைய மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.109 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,013க்கும் சவரனுக்கு ரூ.872 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,104க்கும் விற்கப்படுகிறது. ஒரே வாரத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,488க்கு உயர்ந்துள்ளது.

தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உச்சம் தொட்டு வருகிறது. அதிலும் கடந்த சில வாரங்களாக தங்கம் விலையானது புதிய உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியுள்ளதால், நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறுகையில், “ தங்கத்தில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் வேறு எதிலும் முதலீடு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்தால் தான் தப்பிக்க முடியும் என்று பெரும் முதலீட்டாளர்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். இதுவும் தங்கம் விலை புதிய உச்சத்தை கடப்பதற்கு காரணம். இன்னும் தங்கம் விலை உயருவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *