இந்தியாவில் PUBG கேமிற்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்…!!

இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி, ஜூலை-27

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை மத்திய அரசு கடந்த ஜூன் 29ம் தேதி தடை செய்தது.
இந்நிலையில், தற்சமயம் மேலும் 47 சீன செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவை ஏற்கனவே தடை செய்யப்பட்ட சீன செயலிகளின் குளோனாக செயல்பட்டது கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

புதிதாக தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகள் பட்டியல் விரைவில் முழுமையாக வெளியாகும் என கூறப்படுகிறது.

இவற்றில் டிக்டாக் லைட், ஹெலோ லைட், ஷேர்இட் லைட், பிகோ லைட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது. தற்சமயம் இந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் கிடைப்பதில்லை. 47 சீன செயலிகள் மட்டுமின்றி 250 சீன செயலிகளுக்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த செயலிகள் பட்டியலில் அலிபாபா குழுமத்தின் பப்ஜி மொபைல் கேமும் இடம்பெற்று இருக்கிறது. பப்ஜி மொபைல் கேம் தடை பரிசீலனை விவகாரம் தற்சமயம் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *