ஆகஸ்ட் 5ந்தேதி முதல் ரேஷனில் இலவச முக கவசங்களை பெற்றுக்கொள்ளலாம்.. அமைச்சர் காமராஜ்

ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச முக கவசங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-27

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம், இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, குடும்ப அட்டைதாரர்கள் சிலருக்கு இலவச முகக்கவசங்களை வழங்கினார்.

அதாவது, முதற்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் இலவச முக கவசங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஆகஸ்ட் 1,3,4 ஆகிய தேதிகளில் வீட்டிற்கே சென்று முக கவசத்திற்கான டோக்கன் வழங்கப்படும். பின்னர் டோக்கனை கொண்டு சென்று 5-ந்தேதி முதல் ரேஷன் பொருட்களுடன் இலவச முக கவசங்களை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *