பா.ஜ.க. –சிவசேனா கூட்டணி மக்களுக்கான கூட்டணி-அமித்ஷா

மகராஷ்டிரா, அக்டோபர்-11

மகராஷ்டிரா மாநிலம் புல்தானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கவேண்டும் என்பது பா.ஜ.க.வின் பல நாள் நிலைப்பாடு என்றும், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம், இதில் மற்ற நாட்டு நபர்கள் தலையிடுவது ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அமித்ஷா கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தில் 70 வருடங்களில் எந்த ஒரு பிரதமரும் செய்யாததை மோடி தைரியமாக செய்திருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்தார். மற்ற அரசியல் கட்சிகள் போன்று இல்லாமல் பா.ஜ.க. தேசத்தின் பாதிகாப்பு கருதி செயல்படுவதாகவும் கூறினார். காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் காஷ்மீர் விவகாரத்தில் அவர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *