காதலியை கரம்பிடித்த பிரபல தெலுங்கு ஹீரோ நிதின்..

பிரபல நடிகர் நிதின் திருமணம் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ஐதராபாத், ஜூலை-27

தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான சுதாகர் ரெட்டியின் மகன் பிரபல நடிகர் நிதின். சில படங்களை தயாரித்தும் உள்ள நிதின், ஷாலினி என்பவரை சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். திருமணத்தை ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் துபாயில் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொரோனா காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. ‘மாஸ்க் அணிந்து கொண்டு திருமணம் செய்துகொள்ள தனக்கு விருப்பம் இல்லை என்பதால் திருமணத்தை தள்ளி வைத்ததாக நிதின் தெரிவித்திருந்தார்.

கடந்த 22 ஆம் தேதி நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் நிச்சயதார்த்த விழா நடந்தது. இதில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உட்பட சில திரைத் துறையினரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள தாஜ் பாலாக்ணுமா பேலஸ் ஓட்டலில் நிதின் – ஷாலினி திருமணம் நேற்று நடந்தது. இதில் அவருடைய நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். நடிகர்கள் வருண் தேஜ், சாய் தரண் தேஜ் உட்பட சில நடிகர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சமூக வலைதளங்களிலும் நடிகர் நிதினுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *