வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!
வெப்பச்சலனம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, ஜூலை-27

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். குறிப்பாக, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி், நாகப்பட்டினம் மாவட்டங்கின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
இன்று (27.07.2020) கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெயக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
தென் மேற்கு அரபிக்கடல், தென் மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 29-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.