இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 49,931 பேருக்கு கொரோனா..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, ஜூலை-27

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை கடந்துள்ளது. மொத்தம் 14,35,453 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 49,931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 708 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,771 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 9,17,568 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,85,114 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,75,799 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13,656 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,13,238 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1,48,905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2,13,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,494 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,56,526 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 53,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,30,606 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,827 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,14,875 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 11,904 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *