சீன அதிபருக்கு எதிராக போராட்டம்: 5 திபெத்தியர்கள் கைது

சென்னை, அக்டோபர்-11

சென்னை கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா ஓட்டல் அருகே சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட 5 திபெத்தியரை போலீசார் கைது செய்தனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வர இருப்பதையொட்டி, சென்னை நகரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அவரும், பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர்.

இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா ஓட்டல் அருகே முழக்கமிட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 5 திபெத்தியர்களை போலீசார் கைது செய்தனர்.  பலத்த பாதுகாப்பையும் மீறி சீன அதிபர் தங்கவிருக்கும் ஓட்டல் அருகே வந்து போராட்டம் நடத்திய போது போலீசாரிடம் சிக்கினர். சீன அதிபருக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி அவர்கள் சென்றனர்.  தனியார் ஓட்டல் அருகே 7 அடுக்கு பாதுகாப்பு உள்ள நிலையிலும் கூட்டத்தோடு கூட்டமாக வந்து கோஷமிட்ட 5 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *