ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகளை திறக்க உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை பரிந்துரை..!!

டெல்லி, ஜூலை-26

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்க ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் திரையரங்கு உரிமையாளர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக இடைவெளி, உடல் வெப்ப பரிசோதனை என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற தயாராக இருப்பதாகவும், திரையரங்குகளை திறந்தால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி பிறக்கும் என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இதனையடுத்து, ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் என்று, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உள்துறை அமைச்சருக்கு பரிந்துரையை அனுப்பி உள்ளது. அந்த பரிந்துரையில் 25 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் இந்த பரிந்துரை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *