ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தியது அடக்குமுறை.. ஜெ.தீபா புகார்..!

வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-25

இது குறித்து செய்தியாளர்களிடம் ஜெ.தீபா பேசியதாவது:-

ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கான மதிப்பீடு தொகை ரூ.68 கோடி என்பது தவறானது. அரசு செய்தது அத்துமீறிய செயல் வீட்டின் மதிப்பை நிர்ணயித்ததை ஏற்றுக்கொள்ள மாட்டோம். வீட்டில் இருந்த பொருட்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியப்படுத்தவில்லை. எங்களுக்கு பணம் தேவையில்லை. ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களாக உயர்நீதிமன்றம் எங்களை அறிவித்துள்ளது.

வேதா இல்லத்தில் உள்ள பொருட்கள் விவரம் குறித்து எங்களுக்கு தெரிவிக்கவில்லை. நிலத்தை கையகப்படுத்த மட்டுமே அரசால் முடியும். பொருட்களை எடுக்க முடியாது. தமிழக அரசு எங்கள் சொத்துகளை அபகரித்துள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எப்படி அரசு அறிவிக்கலாம். ஜெயலலிதாவின் வேதா இல்லம் எங்கள் பூர்வீக சொத்து. எங்கள் பூர்வீக சொத்தை அரசுடைமையாக்குவதில் உடன்பாடில்லை. வாரிசுகள் யாருமே இல்லை என்று அரசு அறிவித்தது எப்படி? எங்களுடைய ஆட்சேபனைகள் எதுவும் ஏற்கப்படவில்லை.

சமூக சேவை நிறுவனங்களை ஜெயலலிதா பெயரில் அதிமுக தொடங்காதது ஏன்? தேர்தல் பிரசாரத்தில் மட்டும்தான் ஜெயலலிதா பெயரை உச்சரித்தார்கள். ஜெயலலிதாவின் வாரிசுகளான நாங்கள் மிகவும் எளிய வாழ்க்கையே வாழ்கிறோம். அதிமுக வாக்கு வங்கியை குறிவைத்தே வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குகிறார்கள். வேதா இல்லத்தை விட்டுவிடுங்கள். ஜெ. இல்லத்தை கையகப்படுத்தியது அடக்குமுறை. உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்வோம். ஜெயலலிதா போயஸ் இல்லம் விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும். நியாயம் கிடைக்க அதிமுக தொண்டர்கள் துணைநிற்க வேண்டும்.

இவ்வாறு ஜெ. தீபா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *