தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை, ஜூலை-25

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, வேலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை ராணிப்பேட்டை, தருமபுரி, நாமக்கல், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் கூடபாக்கம், வில்லியனூர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முருங்கம்பாக்கத்தில் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.