மத்தியப்பிரதேச முதல்வர் சவுராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

மத்தியப்பிரதேச முதல்வர் சவுராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போபால், ஜூலை-25

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 26,210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 791 பேர் உயிரிழந்த நிலையில், 17,866 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 7553 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மத்தியப்பிரதேச முதல்வர் சவுராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்டர்களின் அறிவுரைப்படி தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திகொண்டுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் சவுராஜ் சிங் சவுகான், என் அன்பான நாட்டு மக்களே, எனக்கு கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருந்தேன், பரிசோதனைக்குப் பிறகு எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் யார் தொடர்பு கொண்டாலும், அவர்களும் கொரோனா பரிசோதனையைச் செய்யுங்கள் என்று எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். தனக்கு கொரோனா உறுதியான நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக பதிவிட்டுள்ளார்.

மேலும், கொரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளதாக சவுகான் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *